சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது 30வது படமாக 'பிரதர்' எனும் படத்தில் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, பிரியங்கா மோகன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்கா, தம்பி சென்டிமென்ட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படம் வெளியாகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் இன்று(ஆக., 3) இந்த படத்தை வருகின்ற தீபாவளிக்கு வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதே தேதியில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.