நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது |
தமிழ் சினிமாவில் விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. அப்படியே ஹிந்திப் பக்கம் சென்று ஷாரூக்கான் கதாநாயகனாக நடிக்க 'ஜவான்' படத்தை இயக்கி 1000 கோடி வசூலைப் பெற்று வியக்க வைத்தார்.
'ஜவான்' படம் வெளிவந்து ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அவருடைய அடுத்த படத்தின் நாயகன் யார், தயாரிப்பு நிறுவனம் யார் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல் வந்தது. அதற்கடுத்து ஹிந்தி நடிகர் சல்மான் கான் நடிக்கப் போகும் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் என்று சொன்னார்கள். ஆனால், எதுவுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் தற்போது தனது மும்பை அலுவலகத்தில் உதவியாளர்களுடன் அடுத்த படத்திற்கான கதையின் இறுதி வடிவத்தைத் தயார் செய்து கொண்டிருக்கிறாராம். அதை முடித்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அந்தப் படம் மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என்பது தற்போதைய தகவல்.