ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

பேட்ட, என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். தற்போது அவர் நடித்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இதில் அவர் விஜய் ஆண்டனி ஜோடியாக நடித்துள்ளார். விஜய் மில்டன் இயக்கி உள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி வெளிவருகிறது.
படத்தில் நடித்திருப்பது குறித்து மேகா ஆகாஷ் கூறியதாவது: விஜய் மில்டன் சார் எப்போதும் தனது படங்களில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரங்களைத் தருவார். 'மழை பிடிக்காத மனிதன்' படத்திற்காக என்னை அணுகியபோது, கதையைக் கேட்கும் முன்பே என் மனதில் தோன்றிய முதல் விஷயம் எனக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் கிடைக்கிறது என்பதுதான். நான் நினைத்தது போலவே, படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. என் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பாக இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது.
என் கேரியரில் சிறந்த கதாபாத்திரத்தை 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜய் மில்டன் கொடுத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்த சிறந்த வாய்ப்பை வழங்கிய ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது நன்றி. என்றார்.




