ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
தமிழ் சினிமாவில் முக்கியமான பெண் இயக்குனர்களில் ஒருவர் ஹலிதா ஷமீம். பூவரம் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இவர் தற்போது 'மின்மினி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இதனை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்து ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசை அமைத்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் வளர்ந்து ஆளான பிறகு அவர்களை மீண்டும் அதே கேரக்டர்களில் நடிக்க வைத்து உருவாகி இருக்கும் படம் இது. இந்த படத்தின் பணிகள் முடிந்து விரைவில் வெளிவர இருக்கிறது. படம் பற்றி
ஹலிதா ஷமீம் கூறியதாவது : “குழந்தைகளை சின்ன வயதில் வைத்து படம் எடுத்து பின்னர் அதற்காக காத்திருந்தார்களே அந்தப் படமா என பலரும் கேட்கிறார்கள். இதைப் புதுமுயற்சியாக செய்ய வேண்டும் என்று நினைத்து நாங்கள் செய்யவில்லை. படம் எடுக்க ஆரம்பித்தபோது கூட இப்படி காத்திருப்போம் என்று நாங்களும் நினைக்கவில்லை. ஏனெனில், குழந்தைகளாக இவர்கள் சின்சியராக நடித்துக் கொடுத்ததை இவர்கள் வளர்ந்த பிறகு வந்த போர்ஷனை பிற நடிகர்கள் நடித்துக் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. அதனால்தான் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.
குழந்தை பருவத்திலிருந்து பதின்ம வயதுக்கு மாறும்போது அவர்களிடம் ஏற்படும் மனம் மற்றும் உடல்ரீதியான மாற்றங்களை பேசுகிற படம். ஒவ்வொரு மனிதனுக்கும் நட்பு என்பது ஆழமாக உருவாவது குழந்தை பருவத்தில்தான். அந்த நட்பு பதின்ம வயது வரை தொடர்ந்தால் அதன் ஆழமும், அர்த்தமும் வலுவானதாக இருக்கும் என்பதை சொல்லும் படம். சென்னையில் தொடங்கும் படம் காஷ்மீரில் முடியும். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக வந்த மனோஜ் பரமஹம்சா எனது உழைப்பு, நோக்கம் இவற்றை புரிந்து கொண்டு அவரே தயாரிப்பாளர் ஆனார். என்றார்.