'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
'சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர் இயக்கி உள்ள திரைப்படம் 'மின்மினி'. 2015ல் இந்த படம் ஆரம்பமானது. குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறியவர்களை மையமாக வைத்து இதன் கதை உருவாகி உள்ளது. இதற்காக இந்த படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களை, இளைஞர்களாக வளரும் வரை 7 ஆண்டுகள் காத்திருந்து நடிக்க வைத்துள்ளார் ஹலிதா.
மின்மினி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதீஜா பேசுகையில் ‛‛இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் நான் தயாராக இல்லை. ஆனால் ஹலிதா விடாப்பிடியாக நான் தான் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஒருகட்டத்தில் இந்த படத்திற்கு நான் தான் இசையமைப்பாளர் என அறிவித்த போது நிறைய டுவீட்களை பார்த்தேன். திறமையான நபர்கள் பலர் இருந்தபோதும் இவரை எதற்கு தேர்வு செய்தீர்கள் என பலரும் கமென்ட் செய்து இருந்தனர். அது என்னை மிகவும் பாதித்தது. இதற்காகவே நம் இயக்குநருக்கு நாம் பெருமை சேர்த்து கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கடுமையாக உழைத்தேன். உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள், இல்லையென்றால் வலைதளங்களில் மோசமாக திட்டாதீர்கள்'' என்றார்.