'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி மற்றும் பலர் நடிக்க 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற பெயரில் படம் ஆரம்பமாகி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தை சுருக்கமாக 'எல்ஐசி' என படக்குழுவினர் குறிப்பிட்டதால் 'எல்ஐசி' நிறுவனம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் படத்திற்கு 'ப்ளூ ஸ்டோரி' என தலைப்பு மாற்ற உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், தற்போது 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்று பெயரை மாற்றியுள்ளார்கள். அதனால், 'எல்ஐசி' என்று முன்பு சுருக்கமாகக் குறிப்பிடப்பட்ட பெயரை தற்போது 'எல்ஐகே' என குறிப்பிடுகிறார்கள்.
முதல்பார்வை வெளியீடு
இன்று படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாள் என்பதால் இந்தத் தலைப்பு மாற்ற அறிவிப்பு. அடுத்து படத்தின் முதல் பார்வை இன்று காலை 11:11 மணிக்கு வெளியானது.