சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

தமிழ் சினிமாவில் யதார்த்தமான நடிகை எனப் பெயரெடுத்தவர் அஞ்சலி. 'கற்றது தமிழ், அங்காடித் தெரு, அரவான், இறைவி, தரமணி' ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரங்களும், நடிப்பும் பேசப்பட்டது. இது போலவே தெலுங்கிலும் சில படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
தற்போது தமிழில் அவர் நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படமும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் 'பாஹிஷ்கரனா' என்ற வெப் தொடரில் தற்போது நடித்து வருகிறார் அஞ்சலி. அதில் பல நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளாராம். அப்படியான காட்சிகளில் நடிப்பதே கடினம் எனக் கூறியுள்ள அஞ்சலி, “குழுவில் உள்ள பல ஆண்களுக்கு மத்தியில் அப்படியான காட்சிகளிலில் நடிக்க வேண்டியிருக்கும். அப்படியான ஒரு சூழலை எதிர் கொண்டு நடிப்பது சிரமமான ஒன்று,” என்று குறிப்பிட்டுள்ளார்.