'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜூன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிப்பில் உருவாகி வந்த படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம்.
இருந்தாலும் இன்னும் சில நாட்கள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடர்பான பேட்ச் ஒர்க் நடைபெற இருப்பதாகவும் கூறுகிறார்கள். விடாமுயற்சி படம் தீபாவளி வெளியீடு என அறிவித்திருந்தார்கள். ஆனால் படப்பிடிப்பு முடியவில்லையே என்ற பேச்சு எழுந்ததால் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என கூறப்பட்டது. தற்போது படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு தீபாவளிக்கு விடாமுயற்சி படம் கண்டிப்பாக திரைக்கு வந்து விடும் என்பது தெரிய வந்துள்ளது.