அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'வீராயி மக்கள். வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் படம் பற்றி இயக்குநர் நாகராஜ் பேசியதாவது: இந்த படம் முழுக்க நான் வாழ்ந்து பார்த்த அன்பு, கோபம், வாழ்க்கை, வாழ்வியல். முதல் படம் முடித்த பிறகு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தை நான் எழுதி முடித்ததும், நான் முதன் முதலாக தேர்வு செய்தது வேல ராமமூர்த்தியைத்தான், அவர்தான் வேண்டுமென்று நினைத்தேன், அவரும் ஒப்புக் கொண்டார். இந்தப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும், கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரமும் மண் மனம் மாறாத கதாபாத்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதேபோல அனைத்தும் அமைந்தது விட்டது.
மறைந்த மாரிமுத்து சாரின் உழைப்பு இந்த படத்திற்கு பெரிய உதவியாக இருந்தது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சந்தோசத்தை போல, வேறு எந்த வீட்டிலும் இருக்காது. எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு. சிதைந்து போன கூட்டுக்குடும்ப வாழ்கை மீண்டும் வர வேண்டும் என்பதை வற்புறுத்தும் படம் இது என்றார்.