‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ |
கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சைத்ரா ஆச்சார். 'மஹிரா' படத்தில் அறிமுகமான அவர் அதன்பிறகு பல படங்களில் நடித்தார். 'சப்த சகர்தாச்சே எலோ' படத்தின் ரக்ஷித் ஷெட்டியுடன் நடித்ததன் மூலம் முன்னணி நடிகை ஆனார். தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் சித்தார்த் ஜோடியாக அவரது 40வது படத்திலும், ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களின் மூலம் இங்கு அழுத்தமாக கால் பதிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. டோபி, சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி படங்களில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு சித்தார்த் படத்துக்கு அழைத்தார்கள். இந்தப் படத்தில் மார்ச் மாதம் ஒப்பந்தம் ஆனேன். அதை வெளியில் சொல்லாமல் பாதுகாப்பது கடினமாக இருந்தது. எப்போதும் என் நடிப்பு பேசப்பட வேண்டும் என்று நினைப்பேன். அதுதான் இந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. இதற்கு முன் என்னால் தமிழைப் புரிந்து கொள்ள முடியும். இப்போது படப்பிடிப்பில் தொடர்ந்து பேசி வருவதால் என்னால் நன்றாக பேச முடிகிறது. என்றார் சைத்ரா.