'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

2001ம் ஆண்டு வந்த 'மின்னலே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் மேனன். அதன்பின் 'காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட வெற்றிப் படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரையில் 20 படங்களை இயக்கியுள்ளார் கவுதம். தமிழில் அவர் வைக்கும் தலைப்புகள் கவிதை நடையில் இருக்கும் என பாராட்டுபவர்கள் அதிகம். அந்த அளவிற்கு தமிழ் மீது பற்று கொண்டவர். அவரது தாய்மொழியான மலையாளத்தில் இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இத்தனை படங்களுக்குப் பிறகு ஒரு படத்தை இயக்க உள்ளார்.
மம்முட்டியின் படத் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரிப்பில் உருவாகும் ஆறாவது படத்தை கவுதம் மேனன் இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று கொச்சியில் நடைபெற்றது. அதில் கவுதம், மம்முட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் நாயகி மற்ற விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
கவுதம் கடைசியாக தமிழில் இயக்கிய 'துருவ நட்சத்திரம்' படம் நிதிச்சிக்கலில் சிக்கி இன்னும் வெளியாகாமல் உள்ளது.




