ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை |

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் ஹரிஷ் கல்யாண் இந்துஜா ரவிச்சந்திரன், எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான படம் ‛பார்க்கிங்'. கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான இந்த படம் 17 கோடி வரை வசூல் ஆனது. இந்த நிலையில் பார்க்கிங் படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் மீண்டும் நடிக்க போகிறார் ஹரிஷ் கல்யாண். அவரது பிறந்தநாளை ஒட்டி நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தை அர்ஜுன் தாஸ் நடித்த அந்தகாரம் என்ற படத்தை இயக்கிய விக்னாராஜன் இயக்குகிறார். இந்த தகவலை ஒரு போஸ்டர் உடன் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.




