கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! |

பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்த 'கல்கி 2898 ஏடி' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாள் வசூலாக சுமார் 180 கோடி வசூலித்திருக்கலாம் என முந்தைய செய்தியில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில், முதல் நாள் வசூலாக 191.5 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர் தோல்விகளில் தவித்து வந்த பிரபாஸுக்கு இந்த வசூல் நிச்சயம் மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும்.
நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த வார இறுதிக்குள்ளாகவே இப்படம் 500 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் தேவையில்லாத கேமியோ கதாபாத்திரங்கள், நீளமான சண்டைக் காட்சிகள் படத்தின் தரத்தையும், வேகத்தையும் குறைத்துள்ளன. அவை படத்திற்கு மைனஸ் ஆக உள்ளன.
இருந்தாலும் 1000 கோடி வசூலை இப்படம் கடக்குமா என்பது திங்கள் கிழமைதான் தெரிய வரும்.