என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத ஸ்ரீஹரி என்ற இளைஞர் 'சூரியனும் சூரிய காந்தியும்' என்ற படத்தின் மூலம் கதை நாயகன் ஆகியுள்ளார். இந்த படத்தை டி.டி.சினிமா ஸ்டூடியோ சார்பில் ஏ.எல்.ராஜா மற்றும் டெய்லி குருஜி இணைந்து தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல்.ராஜா இயக்கி உள்ளார். ரிதி உமையாள் நாயகியாக நடித்துள்ளனர். அப்புகுட்டி, விக்ரம் சுந்தர், சந்தான பாரதி, செந்தில்நாதன், ராஜசிம்மன், மங்களநாத குருக்கள், அழகு, சேஷு உள்பட பலர் நடித்துள்ளனர். திருவாரூர் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.எஸ்.ரவிபிரியன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஏ.எல்.ராஜா கூறும்போது “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியாரின் பாடலே கதையின் மைய கரு. சூரியன் மேல் கொண்ட சூரியகாந்தி பூவின் காதலை போல ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கிறார்கள். அந்த காதலுக்குள் ஜாதி என்கிற பேய் நுழைந்து என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் படத்தின் கதை” என்றார்.
ஏற்கெனவே கேட்பு திறன், பேசும் திறன் இல்லாத அபிநயா ‛நாடோடிகள்' படத்தில் இருந்து தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.