பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
வட இந்தியாவில் பிறந்தாலும் தென்னிந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறவர் தமன்னா. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கிய 'கேடி' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா, 'அரண்மணை 4ம் பாகம்' வரையில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வரும் தமன்னா தற்போது ஹிந்தி படங்கள், வெப் தொடர்களிலும் நடிக்கிறார். முன்பை விட இப்போது கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில் பெங்களூரு ஹெப்பால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமன்னாவின் வரலாறு இடம் பெற்றுள்ளது. 'சிந்தி பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை' என்ற பாடத்தில் தமன்னா பற்றி இடம் பெற்றுள்ளது. காரணம் தமன்னா சிந்தி இனத்தை சேர்ந்தவர்.
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய விஷயம் என்ன உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
“சிந்தி சமூகத்து பெண்கள் மிகவும் கட்டுபாடானவர்கள். ஆனால் அவர்கள் தற்போது கட்டுப்பாடுகளை உடைத்து பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் கலைத் துறையில் சாதனை படைத்த தமன்னா பற்றி பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இது எப்படி தவறாகும், சினிமாவும் ஒரு கலைதானே” என்று பள்ளி நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளார்களாம்.