ஜானி டெப் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்: ஆன் ஸ்டிரேஞ்சர் டைட்ஸ்' படத்தில் ஜானி டெப்பின் நண்பனாக நடித்து புகழ்பெற்றவர் பிரபல ஹாலிவுட் நடிகர் தமயோ பெர்ரி. 'சார்லஸ் ஏஞ்சல்ஸ் 2, புளூ கிரஷ்க் உள்ளிட்ட மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.
தமயோ பெர்ரி அடிப்படையில் ஒரு கடல் அலை சறுக்கு விளையாட்டு வீரர். ஹவாய் தீவில் அலை சறுக்கு பயிற்சிகளும் அளித்து வந்தார். கடலில் யாரேனும் தவறி விழுந்தால் நீந்தி சென்று காப்பாற்றி கரைக்கு கொண்டு வரும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமயோ பெர்ரி மலேகஹனா கடற்கரையில் கடல் அலை சறுக்கு பயிற்சியில் ஈடுபட்டபோது அவரை சுறாக்கள் கூட்டாக தாக்கியது. இதில் அவர் கை கால்கள் துண்டாகி மரணம் அடைந்தார். கடலில் பல உயிர்களை காப்பாற்றியவரை அந்த கடலே பலிகொண்டது ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.