பிளாஷ்பேக் : ஹிந்திப் படத்தை ரீமேக் செய்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக் : காணாமல் போன 'கண்ணின் மணிகள்' | நீதிமன்ற தீர்ப்பு எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை : நடிகை அறிக்கை | அவதார் 3 ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள் | விஜயகாந்தின் நல்ல மனசு : சரத்குமார் உருக்கம் | அப்பா ரஜினி படத்தை இயக்குகிறேனா? : மகள் சவுந்தர்யா சொன்ன பதில் | இளையராஜாவும், யுவுனும் இணைந்து பாடிய அம்மா சென்டிமென்ட் பாடல் | பொங்கலுக்கு இத்தனை பான் இந்தியா படங்கள்? தாங்குமா தியேட்டர்கள் ? | வார்த்தை விட்டு மாட்டிக்கொண்ட ராதிகா ஆப்தே! | தெலுங்கில் டப் செய்யப்படும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

அஜித்குமார் நடித்து வரும் படம் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்தோடு இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும், தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் நடித்துள்ள அஜித், விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்ததும் மீண்டும் அப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடரப் போகிறார். இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தில் ரெடின் கிங்ஸ்லி காமெடி வேடத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இப்படத்தில் படம் முழுக்க அஜித்துடன் வரும் மெயின் காமெடியனாக ரெடின் கிங்ஸ்லி நடிப்பதாகவும் கூறுகிறார்கள்.




