டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தமிழ் திரை உலகில் மட்டுமல்ல தென்னிந்திய அளவில் அடுத்ததாக எதிர்பார்க்கப்படும் சுப நிகழ்வு நடிகை நடிகை வரலட்சுமியின் திருமணம் தான். தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் வரலட்சுமி தனது நீண்ட நாள் நண்பரான நிக்கோலய் சக்தேவ் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். வரும் ஜூலை இரண்டாம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே திரை உலகை சேர்ந்த பிரபலங்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் சரத்குமார் குடும்பத்தினர்.
சமீபத்தில் துபாய் சென்றிருந்த வரலட்சுமி அங்கே தனது வருங்கால கணவர் மற்றும் தனது தந்தை சரத்குமார் ஆகியோருடன் ஷாப்பிங் சென்ற வீடியோ வெளியானது.. இந்த நிலையில் துபாயிலிருந்து கிளம்பி நேரடியாக ஐதராபாத்திற்கு வந்து இறங்கிய வரலட்சுமி அங்குள்ள தனது நண்பர்களுக்கு அழைப்பிதழ் விநியோகம் செய்யும் பணியை ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூனை தனது வருங்கால கணவருடன் நேரில் சென்று சந்தித்து தனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் வரலட்சுமி.
கடந்த ஐந்து வருடங்களாக தெலுங்கில் முக்கிய படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இன்னும் அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அவருடன் நல்ல நட்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.