நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01 மணிக்கு 'பர்த்டே ஷாட்ஸ்' என படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள். 50 வினாடிகள் மட்டுமே ஓடும் ஒரு குட்டி டீசர் அது. வெளிநாட்டு லொக்கேஷன், சித்தார்த்தா நுனியின் அசத்தலான ஒளிப்பதிவு, திலீப் சுப்பராயன் மாஸ்டரின் அதிரடியான ஆக்ஷ்ன், யுவனின் சிறப்பானி பின்னணி இசை, வெங்கட் ராஜன் செய்த பாஸ்ட் கட்டிங் என பரபரக்கிறது டீசர்.
முதல் வினாடியிலிருந்து பைக்கில் சிலர் செல்வதை மட்டும் காட்டி, 29வது வினாடியில் பைக்கில் இரண்டு விஜய்களில் ஒருவர் பைக்கை ஓட்ட மற்றவர் இடது கையால் சிலரைச் சுடும் காட்சியுடன் படத்தின் டைட்டில் இடம் பெறுகிறது. விஜய் சிங்கிளாக வந்தாலே மாஸ் ஆக இருக்கும் டபுள் விஜய் என்றால் டபுள் மாஸ் என இந்த வீடியோவை பிறந்தநாள் பரிசாக விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
முதல் சிங்கிளான 'விசில் போடு' பாடல் வந்தபின் படம் பற்றி வேறுவிதமான ஒரு அபிப்ராயம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், தற்போது இந்த டீசர் வந்த பின் படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இது படத்திற்குப் பேருதவியாக இருக்கும்.
இன்று மாலை படத்தின் இரண்டாவது சிங்கிளான “சின்னச் சின்ன கண்கள்..' பாடல் வெளியாக உள்ளது.