சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை | 'சூது கவ்வும் 2' : ஹரிஷா ஜஸ்டின் முதல் படம் 13ம் தேதி வெளியாகிறது |
இன்றைய அதிநவீன தொழில்நுட்ப சினிமாவில் சிறந்த தியேட்டர் அனுபவத்தைப் பெற வேண்டும் என்றால் ஐமேக்ஸ் தியேட்டர்களில் படத்தைப் பார்க்க வேண்டும். அதிலும் விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கிய படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படியான தியேட்டர்களில் பார்த்தால் மட்டுமே அந்த பிரம்மாண்டம் தெரியும்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'கல்கி 2898 ஏடி' படம் அமெரிக்காவில் மட்டும் 210 ஐமேக்ஸ் தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாம். இதுவரையிலான எண்ணிக்கை மட்டும் இவ்வளவு. இன்னும் அந்த எண்ணிக்கை கூடவும் வாய்ப்பிருக்கிறதாம். அது மட்டுமல்ல 'பிஎல்எப்' அதாவது பிரிமீயம் லார்ஜ் பார்மேட் (PLF) விதத்தில் 390 தியேட்டர்களிலும் அங்கு திரையிடப் போகிறார்களாம். இது வழக்கமான தியேட்டர் திரைகளை விடப் பெரியதாக இருக்கும்.
இந்தியாவிலும் பல மாநகரங்களில் ஐமேக்ஸ் தியேட்டர்களில் திரையிடப் போகிறார்கள். ஆனால், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மட்டும் ஐமேக்ஸ் தியேட்டர்களே இல்லை என்பது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு மிகப் பெரும் வருத்தம்.
இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் ரிலீஸ் டிரைலர் வெளியாக உள்ளது என்பது கூடுதல் தகவல்.