இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக 'கள்ள மவுனம்' காத்து வந்த 'போராளி' நடிகர்களில் இன்று (ஜூன் 21) நடிகர்கள் சூர்யா, பார்த்திபன் ஆகியோர் கள்ள மவுனத்தை களைத்து கருத்துக்கூற வாய் திறந்துள்ளனர்.
போராளிகள் போல் காட்டிக்கொள்ளும் சில சினிமா நடிகர்கள், இனம், மொழி, ஜாதி பற்றியெல்லாம் பேசி, அரசுகளை விமர்சிப்பது வழக்கம். அதிலும், இவர்களிடம் சிக்குவது அதிமுக, பாஜ அரசுகள் தான். திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் இவர்கள் எதற்கும் கருத்து சொல்லாமல் காணாமல் போய்விடுவர். தற்போது தமிழகத்தையே உலுக்கியுள்ள கள்ளச்சாராய மரணம் பற்றி இந்த போராளி நடிர்கள் இரண்டு நாட்களாக எதுவும் பேசாமல் ‛‛கள்ள மவுனம்'' காத்தனர்.
இவர்களைக் கண்டித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விளாசி தள்ளினர். இது தொடர்பாக தினமலர் டாட் காமில் ''கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்?'' என்ற தலைப்பில் நேற்று (ஜூன் 20) செய்தி வெளியிட்டோம்.
பார்த்திபன்
அதன்பிறகு ஒவ்வொருவராக தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவ்வபோது ஏதாவது சமூக கருத்துகளை தெரிவித்து வரும் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எதற்கு 10 லட்சம் ரூபாய்? என்ற ரீதியில் 'கள்ளச் சா.....வுக்கு எதுக்கு, நல்லச் சாவு (10 லட்சம்)? எனப் பதிவிட்டுள்ளார்.
இவ்வளவு தான் அவர் சொன்னது. அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கோ தமிழக அரசை கண்டிக்கவோ அவருக்கு தைரியம் இல்லை போல!
சூர்யா
அதேபோல், நடிகர் சூர்யாவும் இரண்டு நாள் மவுன விரதத்திற்குப் பிறகு, தமிழக ஆட்சி நிர்வாகத்தை கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
இது பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது.
வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி ஓட்டளிக்கும் தமிழக மக்களை, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கிற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'மதுவிலக்கு கொள்கை' என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது.
அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும். சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.
பெயரை குறிப்பிடவில்லை
அறிக்கையில் சூர்யா, ‛‛ஆட்சி நிர்வாகத்தை'' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளாரே தவிர, 'ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி'' அல்லது ‛‛திமுக அரசு'' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. ஆட்சி நிர்வாகம் என்றாலே முதல்வர் ஸ்டாலின் நிர்வாகம் என்று நாமே புரிந்துகொள்ள வேண்டியது தான்.
முதல்வரின் பெயரையோ கட்சியின் பெயரையோ குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை என்று ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனர்.