ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் படம் கல்கி 2898 ஏடி. கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பைரவா என்கிற கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்க அவரது நண்பனாக புஜ்ஜி என்கிற கதாபாத்திரத்தில் ஒரே ரோபோ காரும் நடித்துள்ளது. சமீப நாட்களாக இந்த புஜ்ஜி கார் ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பைரவா ஆந்தம் தயாராகி உள்ளது. நேற்று வெளியாகியுள்ள இந்த பாடலில் பிரபாஸ் சீக்கியர் கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த நிலையில் இதன் படப்பிடிப்பின்போது பிரபாஸின் இரண்டு சகோதரிகளும் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து பிரபாஸ் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.