டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

சென்னை: 2026ல் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக வரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என எந்த தேர்தலிலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சி போட்டியிடாது என அறிவித்துள்ளது. மேலும், எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஜூலை 10ல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : கடந்த பிப்.,2ம் தேதி வெளியிட்ட கட்சித் துவக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, கட்சித் தலைவர் விஜய், எங்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களை எங்களின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, 2026ல் நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் எங்கள் இலக்கு. எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது. ஜூலை 10ல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடாது; எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.