சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் |

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள மகாராஜா திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பேசி வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்த விஜய்சேதுபதி அதன்பிறகு 19 (1) ஏ என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் அவருக்கு மலையாளத்தில் பெரிய வரவேற்பை தரவில்லை. என்றாலும் மலையாள படங்களின் மீதான அவரது ஆர்வமும் பிரமிப்பும் தற்போதும் குறையவில்லை.
குறிப்பாக அவர் கூறும்போது, “மலையாள திரையுலகம் தற்போது அதன் அற்புதமான காலகட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான எல்லா மலையாள படங்களையும் விடாமல் பார்த்து வருகிறேன். அதிலும் பிரேமலு திரைப்படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்தேன். அந்த படம் ரொம்பவே இனிமை. அதில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் மட்டுமல்லாது நடித்த அனைவருமே அற்புதமாக பங்களிப்பு செய்திருந்தனர். அது மட்டுமல்ல மம்மூட்டி நடித்த பிரம்மயுகம் படமும் என்னை வெகுவாக கவர்ந்தது” என்று கூறியுள்ளார்.