லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி சினிமா இசை ரசிகர்களின் மனதில் என்றென்றும் நிலையான இடத்தைப் பிடித்திருப்பவர் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.
கடந்த 2020ம் வருடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவு கோடிக்கணக்கான ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
அவரது உடல், திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள எஸ்பிபியின் பண்ணைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது நினைவாலயம் கட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளார் அவரது மகன் எஸ்பி சரண்.
“சொர்க்கத்தின் ஆசியில், எனது கனவு திட்டத்தை இன்று ஆரம்பித்துவிட்டேன்… எஸ்பிபி மெமோரியல்,” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.