காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் |

சினிமாவைப் பொறுத்தவரை அது எந்த மொழியானாலும் ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டால் அதற்கு இரண்டாம் பாகத்தை உருவாக்கும் சூழல் ஒரு காலகட்டத்தில் உருவாகி விடும். இரண்டாம் பாகம் வெற்றி பெறும் போது அடுத்தடுத்த பாகங்களை உருவாக்க இயல்பாகவே ஆர்வம் வந்துவிடும். அப்படி தமிழில் காஞ்சனா(முனி சீரிஸ்), அரண்மனை ஆகிய படங்கள் நான்கு பாகங்களை தொட்டுவிட்ட நிலையில் தெலுங்கிலும் இதேபோல ஒரு வெற்றி படத்திற்கு மூன்றாவது பாகம் எடுக்கும் முயற்சி துவங்கியுள்ளது.
கடந்த 2019-ல் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரீன் பிர்ஸாடா இணைந்து நடித்த எப்-2 திரைப்படம் வெளியானது. குடும்பப் பின்னணியில் காமெடி கலாட்டாவாக உருவான இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த 2022-ல் இதன் இரண்டாம் பாகமாக எப்-3 திரைப்படம் வெளியானது. அந்தப் படமும் ஓரளவுக்கு வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகமாக எப்-4 படம் உருவாக இருக்கிறது என்றும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு பாகங்களிலும் தொடர்ந்த அதே நட்சத்திரக் கூட்டணி தான் இந்த மூன்றாம் பாகத்திலும் இடம் பெற இருக்கிறது. இரண்டு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் அனில் ரவிபுடி தான் இந்தப் படத்தையும் இயக்க உள்ளாராம்.