தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய். இப்படத்தில் அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்க போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் விஜய் அரசியல் களத்திற்கு முழுமையாக இறங்க தயாராகி விட்டதால் அவரது 69வது படம் டிராப் ஆகிவிட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இது குறித்து விஜய் வட்டாரங்களில் விசாரித்தபோது, கோட் படத்தை முடித்துவிட்டு விஜய் அரசியல் பணிகளில் இறங்கி விட்டது உண்மைதான். என்றாலும் இந்த ஆண்டுக்குள் 69வது படத்திலும் நடித்து கொடுத்து விட்டுதான் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார். அரசியல் கதையில் உருவாகும் விஜய்யின் 69 வது படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.