சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் | சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி | முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா அல்லு அர்ஜுன்? - டாக்டரின் கருத்தால் பரபரப்பு | புஷ்பா ஸ்ரீ வள்ளி என எழுதப்பட்ட புடவையுடன் வலம் வரும் ராஷ்மிகா | நாகசைதன்யாவின் மனைவி சோபிதா துலிபாலாவின் சகோதரி பெயரும் சமந்தாவாமே | சிரஞ்சீவி படத்தை தயாரிக்கும் நானி |
மிஷ்கின்
இயக்கத்தில் உருவான பிசாசு -2 படம் ரிலீசுக்கு தயாரானபோதும் பல மாதங்கள்
கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் சேதுபதி நடிப்பில்
‛ட்ரெயின்' என்ற படத்தை கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கினார்.
இப்படத்திற்காக ரயில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த
நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப்
பணிகள் தொடங்கி உள்ளது.
அதோடு, பிசாசு-2 படத்திற்கு முன்பே இந்த
ட்ரெயின் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் மிஷ்கின். எஸ்.தானு
தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் வினய் ராய், பாவனா, நாசர்,
கே. எஸ். ரவிக்குமார், கனிகா, சிங்கபுலி, பப்லு உள்ளிட்ட பலர் முக்கிய
வேடங்களில் நடிக்க இயக்குனர் மிஷ்கினே இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார்.