தமிழுக்கு வரும் ஸ்ராவணி ஷெட்டி | பிலிம் சேம்பர் மூலம் கட்டண உயர்வுக்கு விண்ணப்பித்த பவன் கல்யாண் படத் தயாரிப்பாளர் | பிளாஷ்பேக் : விசு இயக்கிய கமர்சியல் ஆக்சன் படம் | ஜுன் 5, 6ல் 4 படங்கள் ரிலீஸ் | கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் | ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ் | இளையராஜாவை வாழ்த்தாத சினிமா பிரபலங்கள் | பந்தா இல்லாத நாகர்ஜூனா | விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு அதிக வேலைப்பளு காரணமா? : நடிகை விஜி சந்திரசேகர் வேதனை |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் தக்லைப். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சென்னையில் போடப்பட்டுள்ள செட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த செட்டில் கமல்ஹாசன், சிம்பு ஆகிய இருவரும் இடம்பெறும் ஒரு மாஸான குத்து பாடல் படமாக்கப்பட உள்ளது. இதில் கமலும், சிம்புவும் போட்டி போட்டு நடனமாடும் சூழலில் படமாக்கப்பட இருப்பதாக தக்லைப் பட வட்டாரம் தெரிவிக்கிறது.