ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
துரோகி, இறுதிச்சுற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா, சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கினார். பல தேசிய விருதுகளை பெற்ற அந்த படத்தை தற்போது ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்துள்ளார். இந்நிலையில் அடுத்தபடியாக சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் சுதா.
ஆனால் திடீரென்று கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கதை பெரிய அளவில் இம்ப்ரஸ் பண்ணியதால் அவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி விட்டார் சூர்யா. இதனால் சூர்யா நடிப்பில் சுதா இயக்கயிருந்த புறநானூறு படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அடுத்து அவர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். இது சூர்யாவுக்காக அவர் தயார் செய்திருந்த புறநானூறு படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.