ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் 'அமரன்'. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் பயோபிக் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
ஓராண்டாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “கடைசி பிரேம் மற்றும் துப்பாக்கி சல்யூட்டுக்கான நேரம்” என சிறு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் ஆரம்பமானது. அதிக நாட்கள் படப்பிடிப்பு அங்குதான் நடைபெற்றது. சுமார் 75 நாட்கள் வரை நடைபெற்றுள்ளது. சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் இப்படத்தின் தலைப்பை 'அமரன்' என அறிவித்தார்கள்.
படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் விரைவில் படம் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகலாம்.