போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு |
'டபுள் டக்கர்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தீரஜ் நடித்துள்ள புதிய படம் 'பிள்ளையார் சுழி'. மனோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் அபிநயா நாயகியாக நடித்துள்ளார். ரேவதி, மைம் கோபி, வர்கீஸ், டாக்டர் ஸ்ரீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி , குழந்தை நட்சத்திரங்கள் உன்னி கிருஷ்ணன், ஆர்னா, பர்ஹானா, மற்றும் ஸ்ரீ ஷரவண் ஆகியோர் நடித்துள்ளனர், பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.ஹரி இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது.
படம் பற்றி இயக்குனர் மனோகரன் பெரிய தம்பி கூறும்போது “ஒரு மாற்று திறனாளி குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம். மாற்றுத்திறனாளி குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளை பேசுகிறது. வருங்கால தலைமுறையினரான குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளை மதிக்க வேண்டும். அவர்களை சக மனிதர்களாக நடத்த வேண்டும் என்பதை கற்றுத் தரும் படமாக இருக்கும். நியூயார்க் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் இறுதிச் சுற்றில் இடம் பிடித்தது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது” என்றார்.