100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று திடீரென வெளியிடப்பட்டது. துப்பாக்கிகள் நிறைந்த மேஜை மீது கைகளை வைத்திருக்கும் ஒரு அஜித், அவருக்குப் பின்னால், இடது கையில் 'நக்குல்' என்ற ஆயுதத்துடன் மற்றொரு அஜித், வலது பக்கத்தில் 'நடு விரலை' தூக்கிக் காட்டும் இன்னொரு அஜித் இருக்கும் போஸ்டர் வெளியாகியது. 'நடு விரலை' தூக்கிக் காட்டும்படியான போஸ்டருக்கு அஜித் எப்படி சம்மதித்தார் என்பது ஆச்சரியம்.
படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்கிறாரா அல்லது பேன்டஸி ஆக மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறாரா என்பது தற்போதைக்கு சஸ்பென்ஸ் ஆக உள்ளது.
'குட் பேட் அக்லி' படத்தின் முதல் போஸ்டருக்கும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட போஸ்டருக்கும் இருக்கும் வித்தியாசம் ஹெல்மெட் மட்டுமே. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரில் ஹெல்மெட் அணிந்த மூன்று சிம்பு (?) இருந்தார்கள். 'குட் பேட் அக்லி' போஸ்டரில் முகத்தை மறைக்காமல் மூன்று அஜித் (?) இருக்கிறார்கள்.மேலும், இப்போஸ்டருக்கான கலர் டோன் எல்லாம் 'மார்க் ஆண்டனி' ஸ்டைலிலேயே உள்ளது.
'குட் பேட் அக்லி' படம் 'அஅஅ' மாதிரி இருக்கப் போகிறதா, 'மார்க் ஆண்டனி' மாதிரி இருக்கப் போகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள 2025 பொங்கல் வரை காத்திருக்க வேண்டும்.




