இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் | சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் | அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து | 50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' |
மலையாளத்தில் பிருத்விராஜ்க்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்த ‛ஆடு ஜீவிதம்' படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. முன்னதாக, தான் கர்ப்பிணியாக இருந்தபோது இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் அமலா பால். விரைவில் அவருக்கு டெலிவரி நடைபெற உள்ள நிலையில், தற்போது அவர் மலையாளத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‛லெவல் கிராஸ்' என்ற படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை அர்பாஸ் அயூப் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் வெளியிடுகிறார். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.