அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் முடித்த சிவகார்த்திகேயன்! | பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் வரிசைக்கட்டும் படங்கள்! | சிம்புவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் தி கோட் படத்தில் நடந்த மாற்றம்! | லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த பிரபலங்கள்! | காதலரை கரம்பிடித்த மேகா ஆகாஷ்: சென்னையில் எளிய முறையில் நடந்த திருமணம் | மக்களின் ஆதரவு உற்சாகப்படுத்துது...!: சந்தோஷத்தில் சஞ்சனா | போதை மறுவாழ்வு மையத்தில் ஸ்ரீகுமார் அட்வைஸ்! | பெண் குழந்தைக்கு தாயான ரித்திகா! | சீரியலிலிருந்து விலகியது ஏன்? சாய் காயத்ரி விளக்கம் | மதிக்காத நடிகையை வெறுக்கும் இயக்குனர்கள் |
வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து, அதில் இடம்பெற்ற 'அடியாத்தி' என்கிற பாடலின் மூலம் இன்னும் அதிக அளவில் தமிழ் தெலுங்கு ரசிகர்களிடம் பிரபலமானவர் மலையாள நடிகை சம்யுக்தா. அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் ரீமேக்கான போது அந்த படத்தில் நடிகர் ராணாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கில் நுழைந்தார் சம்யுக்தா. அதன் பிறகு பிம்பிசாரா, வாத்தி, விருபாக்ஷா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது சுயம்பு என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் சம்யுக்தா.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “தெலுங்கில் நடிப்பதில் எனக்கு மிகமிக சிரமமாக இருப்பது ஓவர் மேக்கப் போட்டுக் கொள்வது தான். மலையாளத்தில் நடிக்கும் போது மேக்கப் போடுவதற்கான வேலையே இருக்காது. இயல்பாக வீட்டில் இருந்து ஆபீஸ் கிளம்பி செல்வதற்கு என்ன மேக்கப் போட்டுக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு தான் வேலை இருக்கும். ஆனால் தெலுங்கு படப்பிடிப்பில் மேக்கப் என்பது தனி வேலையாகவே இருக்கிறது” என்று கூறியுள்ளார் சம்யுக்தா.