உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் |

மும்பையை சேர்ந்த அதிதி பொஹங்கர், மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். 'லால் பஹாரி' என்ற மராட்டிய படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு ஷீ, ஆஷ்ரம் என்ற வெப் தொடர்கள் மூலம் புகழ் பெற்றார். கடந்த 2017ம் ஆண்டு 'ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும்' என்ற படத்தில் 4 ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, ரெஜினா ஆகியோர் மற்ற 3 ஹீரோயின்கள்.
இந்த படத்திற்கு பிறகு வாய்ப்புகள் இன்றி இருந்த அதிதி தற்போது கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். இந்த படம் மே 10ம் தேதி வெளிவருகிறது. 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.