ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டிய பிறகு இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக மாறிவிட்டது. வட இந்திய திருத்தலங்களில் இந்து மக்கள் அதிகமாக வந்து வழிபடும் ஒரு கோயிலாக ராமர் கோயில் உள்ளது. அயோத்தியில் பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் இடங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப்பச்சன் அயோத்தியின், சரயு நதிக்கரையில் 'த சரயு என்கிளேவ்' என்ற இடத்தில் இடம் வாங்கியுள்ளாராம். ராமர் கோயிலில் இருந்து 15 நிமிடத் தொலைவிலும், அயோத்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 நிமிடத் தொலைவிலும் அந்த இடம் அமைந்துள்ளதாம்.
இது மட்டுமல்லாமல் மும்பை, அலிபாக் பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை 10 கோடிக்கு வாங்கியுள்ளார் என்றும் சொல்கிறார்கள். அந்த இடத்தில் சில நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஏற்கெனவே இடங்களை வாங்கியுள்ளார்களாம். அலிபாக் என்பது தீவுப் பகுதி. அங்கு அமிதாப் விரைவில் பார்ம் அவுஸ் ஒன்றை கட்டப் போகிறாராம்.