காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் | அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது | சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கும் இசையமைக்கும் சாய் அபயங்கர் | ருக்மிணி வசந்த் பிறந்தநாள் : ‛ஏஸ்' முன்னோட்ட வீடியோ வெளியீடு | வடிவேலுக்கு எதிராக வாய் திறக்கமாட்டேன் : கோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் | சூர்யா 45வது படத்தில் விஜய் சேதுபதி? | காளிதாஸ் ஜெயராமிற்கு முதல்வர் நேரில் வாழ்த்து | பரத் படத்தில் 20 நிமிட காட்சியை நீக்கியும் 'ஏ' சான்றிதழ்: தயாரிப்பாளர் புகார் | பிளாஷ்பேக்: இசை அமைப்பாளர் ரகுவரன் | ராகவா லாரன்ஸிற்கு வில்லனாகும் மாதவன் |
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். இளையராஜாவின் வாரிசாக இருந்தாலும் அவருடைய தனித் திறமையால் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். அவருடைய பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் பல உண்டு.
இளையராஜாவின் மகனாக இருந்தாலும் இளையராஜாவுக்கு நெருக்கமாக இருக்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரது படங்களுக்கு யுவன் இதுவரை இசையமைத்தது இல்லை. எந்த சந்தர்ப்பத்திலும் அதற்காக அவர் வாய்ப்பு கேட்டதாகவும் தெரியவில்லை.
கமல், ரஜினி படங்களுக்கு இதுவரையில் இசையமைக்காத யுவன், அஜித்தின் சில பல படங்களுக்கு இசையமைத்து அஜித், யுவன் கூட்டணி வெற்றிக் கூட்டணி என நிரூபித்தவர். 'வலிமை' படத்தில் அந்தக் கூட்டணிக்கும் ஏதோ சிக்கல் வந்து அப்படத்திற்கு பின்னணி இசை அமைக்காமல் விலகிவிட்டார். மீண்டும் அஜித், யுவன் கூட்டணி அமையுமா என்பது சந்தேகம்தான்.
இந்நிலையில் விஜய்யுடன் 21 வருடங்களுக்குப் பிறகு 'தி கோட்' படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிளான 'விசில் போடு' பாடல் நேற்று முன் தினம் வெளியாகி 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ஆனால், நேற்று முதலே யுவன் ரசிகர்களுக்கும், அனிருத் ரசிகர்களுக்கும் இப்பாடல் குறித்து சமூக வலைத்தளங்களில் சண்டைகள் நடந்து வருகிறது. 24 மணி நேரத்தில் பீஸ்ட் பாடலான 'அரபிக்குத்து' படைத்த சாதனையை 'விசில் போடு' முறியடித்ததே அதற்குக் காரணம்.
விஜய் அடுத்து நடிக்க உள்ள அவரது 69வது படத்துடன் சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் இறங்கப் போகிறார். அந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை விஜய் யாருக்கு தரப் போகிறார் என்பதே இந்த சண்டைகளுக்கான பின்னணியாகவும் இருக்கும் என்கிறார்கள் கோலிவுட்டில்.
அனிருத் அவருடைய அறிமுகப் படமான '3' படத்தில் 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் மூலம் யு-டியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற புதிய சாதனையை படைத்தார். அப்பாடல் தற்போது வரை 451 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், 'மாரி 2' படத்தில் யுவன் இசையில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் அதைவிட சுமார் மூன்று மடங்கு வரவேற்பைப் பெற்று 1500 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. யு டியுபில் தமிழ் சினிமா பாடல்களில் அதிகப் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இந்தப் பாடல்தான் உள்ளது.