
கண்ணப்பா படத்தில் அக்ஷய்குமார்
இப்போது ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் இணைகிறார் என படத்தின் நாயகன் விஷ்ணு மஞ்சு அறிவித்துள்ளார். அக்ஷய்குமார் ஐதராபாத்திற்கு வந்த வீடியோவைப் பதிவிட்டு, “கண்ணப்பா பயணம் இன்னும் உற்சாகமாகிறது. சூப்பர் ஸ்டார் அக்ஷய்குமாரை தெலுங்கு திரையுலகத்திற்கு வரவேற்கிறோம். கண்ணப்பா படத்தின் மூலம் தெலுங்கில் அவர் அறிமுகமாவதை அறிவிக்கிறோம். மறக்க முடியாத சாகசத்திற்குத் தயாராக இருங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் கன்னடத்தில் 1993ல் வந்த "விஷ்ணு விஜயா" என்ற படத்திலும், தமிழில் 2018ல் வந்த "2.0" படத்திலும் நடித்துள்ளார் அக்ஷய்குமார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!