பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார் சுந்தர். சி. இதில் தமன்னா, ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் மாத இறுதியில் இப்படம் திரைக்கு வரும் என கூறப்பட்டு வந்ததைத் தொடர்ந்து இப்போது இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 26ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அறிவித்துள்ளனர். மேலும், ஏற்கனவே ஏப்.,26ம் தேதியில் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.