'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் |

பாலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாபி டியோல். சமீபத்தில் வெளிவந்த 'அனிமல்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கம் பேக் கொடுத்தார். தற்போது தமிழில் 'கங்குவா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து மற்றொரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் தனது 63வது படமான 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இப்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாபி டியோல் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.