இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கோட் படத்தை அடுத்து தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார் விஜய். தனது தாயார் ஷோபா சந்திரசேகரின் விருப்பத்திற்காக சென்னை கொரட்டூரில் ஒரு சாய்பாபா கோயில் கட்டியுள்ளார் விஜய். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகின. இந்த கோயிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் உடன் இருந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ்.
அதன் உடன், ‛‛நண்பர் விஜய் கட்டிய சாய்பாபா கோயிலுக்கு அவரது தாயாருடன் சென்றேன். நான் என்னுடைய ராகவேந்திரர் சுவாமி கோயிலை கட்டிய போது எங்கள் கோயிலில் ஒரு பாடலை பாடி தன் இருப்பை எங்களுக்கு அருளினார். இன்று விஜய் கட்டிய கோயிலுக்கு சென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோயில் கட்டியதற்காக அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மையான தெய்வீக மற்றும் இனிமையான அதிர்வுகளை உணர்ந்தேன். அனைவரும் சாய்பாபா கோயிலுக்கு சென்று அவரின் அருளை பெறுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.