தமிழில் மற்ற மொழி நிறுவனங்களின் ஆதிக்கம் | வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன் | தீபாவளி தினத்தில் சூர்யாவும், கார்த்தியும் நேரடியாக மோதிக் கொள்கிறார்களா? | 'விடாமுயற்சி'யை விட 'குட் பேட் அக்லி' குறைவான டிக்கெட் புக்கிங்! | நளினியுடன் இணைந்தது உண்மையா? நடிகர் ராமராஜன் விளக்கம் | குட் பேட் அக்லி - அனைத்து 'அக்லி' வார்த்தைகளையும் 'கட்' செய்த சென்சார் | ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு |
2024ம் ஆண்டின் காலாண்டு எந்தப் படத்தையும் கரை சேர்க்காமல் நட்டாற்றில் தவிக்கவிட்டு கடந்து போனது. தேர்தலுக்குப் பிறகு பல படங்கள் இந்த ஆற்றில் நீந்த வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 'இந்தியன் 2, வேட்டையன்' ஆகிய படங்களின் வெளியீடு பற்றிய அறிவிப்புகள் கடந்த வாரம் வந்தது. இன்று விஜய் நடிக்கும் 'கோட்' பட ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகிவிட்டது
அடுத்து அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி', விக்ரம் நடிக்கும் 'தங்கலான்', சூர்யா நடிக்கும் 'கங்குவா', கார்த்தி நடித்து வரும் இரண்டு படங்கள், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்', விஜய் சேதுபதி நடிக்கும் 'மகாராஜா', ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர், ஜெனி', சூரி நடிக்கும் 'விடுதலை 2', ஆகிய படங்களின் அறிவிப்புகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படங்களைத் தவிர தற்போது தயாரிப்பில் இருக்கும் சில முக்கிய படங்களின் வெளியீட்டு அறிவிப்பும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு வெளியாகலாம்.