முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹரா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் மோகன். அதோடு, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் கோட் படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் விஜய் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171 வது படத்திலும் மோகன் வில்லனாக நடிப்பதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது. ஆனால் இது குறித்து மோகன் தரப்பை விசாரித்த போது, ரஜினி படத்தில் நடிப்பது குறித்து இதுவரை யாரும் அணுகவில்லை. அப்படி அழைப்பு வந்தால் கண்டிப்பாக சொல்கிறேன் என்றார் மோகன். அதனால் ரஜினி 171 வது படத்தில் மோகன் நடிப்பதாக வெளியாகி உள்ள செய்தி வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.