மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்கு பல நடிகர் நடிகைகள் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அதன் பிறகு பாஜகவிலும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பலரும் இணைந்து கொண்டார்கள். அதோடு பாஜகவில் இணைந்திருந்த கவுதமி, காயத்ரி ரகுராம் போன்றவர்கள் சமீபத்தில் அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார்கள். அதேசமயம் கடந்த காலங்களில் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்து வந்த நடிகர் செந்தில் இந்த முறை பாஜகவுக்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.
இப்படி பல நடிகர்களும் பல கட்சிகளில் இடம்பெற்று பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தபோது நடிகை ராதிகாவும் அந்த கட்சியில் இணைந்து தற்போது விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் காமெடி நடிகை ஆர்த்தியும் பாஜகவில் இணைந்திருக்கிறார். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்த இவர் அவரது இறப்புக்கு பிறகு அந்த கட்சியில் இருந்து வெளியேறி விட்டார். இந்த நிலையில் நேற்று அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.