சென்சார் சான்றிதழ் வரலையா : டென்ஷனில் பராசக்தி, ஜனநாயகன் குழு | ஓமனில் டிரக்கிங் சென்ற பாடகி சித்ரா ஐயரின் சகோதரி உயிரிழப்பு | பாலா தயாரிப்பில் படம் இயக்கப் போகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? | இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது : இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தகவல் | இந்திய பாக்ஸ் ஆபீஸ் 2025 : எத்தனை கோடி வசூல் தெரியுமா ? | அதிக சதவீதம் கேட்கும் 'ஜனநாயகன்' ; தயங்கும் தியேட்டர் உரிமையாளர்கள் : பிரச்னை தீருமா? | 'பராசக்தி' படத்தில் அண்ணாதுரை... கருணாநிதியும் இருக்கிறாரா? | 2வது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்ற சிபி சக்கரவர்த்தி | ரத்தக்கண்ணீருக்கு புதிய அங்கீகாரம் | ஓடிடி டிரெண்டிங்கில் 'பகவந்த் கேசரி' |

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “டியர்” படம் ஏப்., 11ல் திரைக்கு வருகிறது. காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, 'ப்ளாக் ஷீப்' நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. ஐஸ்வர்யா கூறுகையில், ‛‛வாராவாராம் ஜிவிக்கு படம் வருகிறது. இந்தாண்டு அவருக்கு நடந்தது, கடந்தாண்டு எனக்கும் நடந்தது, என்னையும் வெள்ளிக்கிழமை நாயகி என்பார்கள். அதன் காரணங்கள் எனக்குத் தெரியும். டியர் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். எல்லோருமே மிகவும் பிடித்து, விரும்பி நடித்த படம். இந்தப்படம் எனக்கு மூன்று வருடப் பயணம். தமிழ் சினிமாவிற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவருடன் இன்னொரு படமும் செய்துள்ளேன் விரைவில் திரைக்கு வரும். எங்கள் படத்தின் தூண் ஜீவி தான். அவரைப்பார்த்தால் பிரமிப்பாக உள்ளது. இந்தப்படம் கண்டிப்பாக வித்தியாசமான அனுபவமாக இருக்கும்'' என்றார்.




