சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
2019ம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி, அதன்பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 2023ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‛கோட்' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது குடும்பத்தாருடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த மீனாட்சி சவுத்ரி, அங்கு ஒரு ட்ரெயினரிடம் பாக்சிங் பயிற்சி பெற்றுள்ளார். அது குறித்த புகைப்படங்களை அவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். கோட் படத்திற்காக அவர் இந்த பயிற்சியை எடுத்தாரா? இல்லை ஒரு தற்காப்பு கலையை தெரிந்து வைத்துக்கொள்வோம் என்பதற்காக பயிற்சி எடுத்துள்ளாரா? என்பது தெரியவில்லை.