சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? | விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு |

இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் 'கேம் சேன்ஞ்சர்', தமிழில் 'இந்தியன் 2' என்ற இரு படங்களிலும் பிசியாக இருக்கிறார். இரண்டுமே 300 கோடிக்கும் கூடுதலான பட்ஜெட்டில் தயாராகிறது. இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட ஷங்கர் அதற்கு பிந்தைய பணிகளில் ஈடுபட்டு வந்தார். அற்போது அந்த பணிகளுக்கு சின்ன கேப் விட்டு மகளின் திருமணத்தில் பிசியாகி விட்டார்.
ஷங்கருக்கு இரண்டு மகள்கள்; இளைய மகள் அதிதி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கு புதுச்சேரியை சேர்ந்த விளையாட்டு வீரர் ரோகித் என்பருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரோகித் போக்சோ வழக்கில் சிக்கியதால் அவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெற்றார் ஐஸ்வர்யா.
தற்போது ஐஸ்வர்யாவை தனது உதவி இயக்குனர் தருண் கார்த்திக் என்பவருக்கு மணமுடித்து கொடுக்கிறார் ஷங்கர். தற்போது இந்த திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. முக்கிய பிரமுகர்களுக்கு ஷங்கர் தனது மனைவியுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார். இந்த திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்திருக்கிறார் ஷங்கர்.