'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
பிளஸ்ஸி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் நாளை மறுதினம் மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ள மலையாளப் படம் 'ஆடுஜீவிதம்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகப் போகிறது. படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த வருடத்தைப் பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவில் மலையாள சினிமாதான் சில வெற்றிகளையும், தரமான படங்களையும் கொடுத்துள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் வரவில்லை.
'ஆடுஜீவிதம்' படத்திற்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “'ஆடுஜீவிதம்'. உயிர் வாழ்வதற்குரிய ஒரு கதையைச் சொல்ல 14 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இது போன்ற மாற்றமும், முயற்சியும் ஒன்றாக இணைவது வாழ்நாளில் ஒரு முறைதான் நடக்கும். இயக்குனர் பிளஸ்ஸி, மற்றும் குழுவினர், பிருத்விராஜ், ரஹ்மான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிருத்விராஜ் தன்னுடைய நண்பர் என்பதால் ஒரு மலையாளப் படத்திற்கு வாழ்த்து சொல்லும் சூர்யா, இது போல தமிழ் சினிமாவில் வெளிவரும் நல்ல படங்களையும் பாராட்டினால் அந்தப் படங்களும் கொஞ்சம் ஓடும்.