ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியாக நடித்து வரும் படம் 'தி பேமிலி ஸ்டார்'. கீதா கோவிந்தம் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் தேவரகொண்டாவின் இந்த படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பரசுராம். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இன்னொரு பக்கம் இந்த படத்தில் இருந்து 'கல்யாணி வச்சா வச்சா' என்கிற சிங்கிள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை மங்லி என்கிற பெயரில் அழைக்கப்படும் சத்தியவதி ரத்தோட் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடல் வெளியானதில் இருந்து இவரும் தற்போது லைம் லைட்டில் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று தனது நெருங்கிய நண்பர்களுடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது இவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கியது. எதிரே வந்த வாகனம் இவர்கள் கார் மீது கிட்டத்தட்ட உரசிய நிலையில் மங்லி மற்றும் அவருடன் பயணித்தவர்கள் அனைவருமே அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்து மங்லி இதுவரை எந்த தகவலையும் வெளியிடாத நிலையில், விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து இந்த செய்தி வெளியாகி உள்ளது.